திண்டுக்கல் மாவட்டத்தில் டிஎன்பிஸ்சி (தொகுதி 2 மற்றும் 2ஏ) முதன்மை தேர்வுக்கு நேரடி இலவசப் பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற்றுவருகிறது.இவ்வலுவலகத்தை நேரடியாகத் தொடர்பு கொண்டு தங்களது விவரங்களைப் பதிவு செய்து, பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.