திண்டுக்கல்: தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன்

50பார்த்தது
திண்டுக்கல்: தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன்
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள ஜெ. ஊத்துப்பட்டி மாலம்மாள் கோயில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை நூற்றுக்கணக்கான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையடி வாங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். 

இந்த விழாவில் சென்னை, மதுரை, கோவை, திண்டுக்கல், பெங்களூரு, சுற்றுவட்டாரப் பகுதிகளான மாலையகவுண்டன்பட்டி, உச்சணம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர் சிறப்பாக செய்தனர்.

தொடர்புடைய செய்தி