பழனி கோயிலில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 9 லட்சம் மோசடி

83பார்த்தது
பழனி கோயிலில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 9 லட்சம் மோசடி
திண்டுக்கல் மாவட்டம், கசவனம்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் அர்ஜுன் பாண்டி (29). இவருக்கும் நத்தம் காமராஜ் நகரைச் சேர்ந்த ஹரிராம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஹரிராமிடம், அர்ஜுன் பாண்டி தனக்கு பழனியில் அறநிலையத்துறையைச் சேர்ந்த பல அதிகாரிகள் தெரியும் என்றும் பழனி கோயில் அலுவலக உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து ஹரிராம் நத்தம் காமாராஜ் நகரைச் சேர்ந்த மணிமாலா (28) என்பவரை அர்ஜுன் பாண்டியிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். மணிமாலாவிடம் பழனி கோயில் அலுவலக உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி வங்கி கணக்கு மூலமும் ஜி. பே மூலமாகவும ரூ. 9 லட்சம் வரை அர்ஜுன் பாண்டி பணம் பெற்றுள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அர்ஜுன் பாண்டி தான் கூறியபடி மணிமாலாவிற்கு வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த 3 மாதமாக பணத்தை கொடுக்காமலும், வேலை வாங்கித் தராமலும் மோசடி செய்துள்ளார். இதனால் ஏமாற்றப்பட்ட மணிமாலா இது குறித்து நத்தம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் தங்க முனியசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அர்ஜுன் பாண்டியை தேடி வந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி