சின்னாளபட்டி சேரன் வித்யாலயா பள்ளி மாணவர்கள் உணவு விற்பனை திருவிழா வருவாய் மூலம் பெற்ற தொகையை ஆதரவற்றோருக்கு நலஉதவிகளாக வழங்கினர். சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் உணவு விற்பனை திருவிழா நடந்தது. மாணவர்கள் தயாரித்து கொண்டு வந்த உணவுப் பொருட்கள், தின்பண்டங்களை பள்ளி வளாகத்திற்குள் விற்பனை செய்தனர்.
இதன் மூலம் கிடைத்த வருவாயை கொண்டு சுற்றுப் பகுதி ஆதரவற்ற ஏழை முதியோருக்கு உடை, போர்வை , உணவு உள்ளிட்ட நல உதவிகளாக வழங்கினர். பள்ளி முதல்வர் திலகம் தலைமை வகித்தார். அம்பாத்துரை இன்ஸ்பெக்டர் மீனாட்சி, உதவி தலைமையாசிரியர் வெண்ணிலா, கஸ்தூரிபா ஆசிரம நிறுவனர் கஸ்துாரி முன்னிலை வகித்தனர். பள்ளி மேலாளர் பாரதிராஜா வரவேற்றார். விழாவில் பங்கேற்றோருக்கு மாணவர்கள் விருந்து பரிமாறினர். மாவட்ட உதவி வன அலுவலர் வேலுமணி நிர்மலா துவக்கி வைத்தனர்.