வலிப்பு நோயால் குழந்தை சாவு!

55பார்த்தது
வலிப்பு நோயால் குழந்தை சாவு!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள செந்துறை மாமரத்துப் பட்டியைச் சேர்ந்தவர் சின்னக்காளை. இவரது மனைவி செல்வி. இவர்கள் இருவருக்கும் 2 வயதில் அட்சயா தேவி என்ற பெண்குழந்தை இருந்து வந்தது. இதற்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை அட்சயா தேவிக்கு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளதை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றுள்ளனர். ஆனால் குழந்தை வீட்டிலேயே இறந்து விட்டது. இது குறித்து நத்தம் காவல் ஆய்வாளர் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி வழக்குப் பதிவு செய்து அட்சயா தேவி உடலை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உடல்கூற் ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you