சாணார்பட்டி: ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

56பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் கொசவப்பட்டியில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தை மின் அலுவலகமாக மாற்றுவது, நத்தமாடிப்பட்டி முதல் ஆர். சி பள்ளி வரை உள்ள தார் சாலையை செப்பண்ணிடுதல், கல்லறை மேடு முதல் கொழிஞ்சிப்பட்டி வரை உள்ள தார் சாலை செப்பண்ணிடுதல், கொசவபட்டி நுழைவாயில் முதல் ஞானபிரகாசர் கோயில் வரை உள்ள வண்ணக்கல் பதிக்கப்பட்ட சாலையில் வேகத்தடை அமைத்திடுதல் மற்றும் கொசவபட்டியில் கால்நடை மருத்துவமனை அமைத்திடுதல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர ஊராட்சி நிர்வாகத்திடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை மனு அளித்தும் கோரிக்கை விடுத்தும் நேரில் வலியுறுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கண்டித்து கொசவபட்டி பேருந்து நிறுத்தம் எதிரே 50க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கண்டித்து திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி