சாணார்பட்டி: 25ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்

69பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 1998-2000 ம் ஆண்டுகளில் 11, 12-ம் வகுப்புகளில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று அதே பள்ளியில் நடைபெற்றது. இதில் 25 வருடங்களுக்கு பிறகு முன்னாள் மாணவ, மாணவிகள் மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் சந்தித்து கொண்டதால் ஒருவருக்கொருவர் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னதாக முன்னாள் மாணவர்கள் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்து ஆட்டம் பாட்டத்துடன் மலர் தூவி மரியாதை செய்து வரவேர்த்தனர். இதைத் தொடர்ந்து இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர் மேலும் முன்னாள் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுக்கு கேக் ஊட்டி தங்களது மகிழ்ச்சி வெளிப்படுத்தினர். இந்நிகழ்வு மிகவும் அனைவரிடமும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது. மற்றும் முன்னாள் மாணவ மாணவிகள் தங்களது ஆசிரியர்களையும் தலைமை ஆசிரியரையும் சந்தித்து பழைய நினைவுகளை பற்றி பேசி மகிழ்ந்தனர். மேலும் இந்நிகழ்வில் முன்னாள் மாணவ மாணவிகள் சுமார் 120க்கும் மேற்பட்டோர் மற்றும் பள்ளித் தாளாளர் எடின்பர்க், தலைமை ஆசிரியர் செல்வநாயகம், முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெயபால், துணை தலைமை ஆசிரியர் விசுவாசம் ராஜ்குமார் மற்றும் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி