பில்லமநாயக்கன்பட்டி: காளைகளுக்கு ஜல்லிக்கட்டு பயிற்சி

78பார்த்தது
தை மாதம் பொங்கல் பண்டிகையின்போது மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு வெகுவிமரிசையாக நடைபெறும். இதேபோல திண்டுக்கல் மாவட்டம் பில்லமநாயக்கன்பட்டி, கொசவபட்டி, புகையிலைப்பட்டி, தவசிமடை, வெள்ளோடு ஆகிய பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு முன் தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பில்லமநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள காங்கேயம், காரிக்காளை உள்ளிட்ட காளைகளுக்கு
பயிற்சிகளில் ஈடுபட்டனர். அதேநேரத்தில், மாடுபிடி வீரர்களாகக் களம் இறங்க உள்ளோரும், அந்த காளைகளை அடக்குவதற்கான பயிற்சியைப் பெறுகின்றனர்.
ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து வெளியேறும்போது எடுக்கும் வேகம் தான், மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் வருவதற்கு உதவும். இதற்கு மூச்சுப் பயிற்சி அவசியம். ஆகவே, 2 நாள்களுக்கு ஒருமுறை காளைகளுக்கு நீச்சல் பயிற்சியும், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி அளிக்கப்படும்.
மாடுபிடி வீரர்களை மிரட்டி சீறிப் பாய்ந்து செல்வதற்கும், திமிலை அடக்க வரும்போது உடலை லாவகமாகத் திருப்பி பாய்வது போலச் செல்லவும் காளைகளுக்கு மண்ணைக் குத்தும் பயிற்சி தரப்படுகிறது.
ஜல்லிக்கட்டு நேரத்தில் அவற்றுக்கு அளிக்கப்படும் உணவுகள் மிகவும் முக்கியமானவை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி