சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிளாஸ்டிக்குறித்த விழிப்புணர்வு

56பார்த்தது
சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிளாஸ்டிக்குறித்த விழிப்புணர்வு
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள மணக்காட்டூர் பகுதி கானகத்தில் உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தவிர்ப்பது குறித்தும் இயற்கையை பாதுகாப்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதற்கு திண்டுக்கல் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்துச்சாமி தலைமை தாங்கினார். குடகிப்பட்டி ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி அழகர்சாமி முன்னிலை வகித்தார். சீட்ஸ் பெண்கள் மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் மேனகா வரவேற்றார். இதில் தேனீ வளர்ப்பது குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் வளர்ப்பாளர் வெள்ளைச்சாமி , அய்யலூர் வாழ்வாதார திட்ட நாற்றங்கால் மேலாளர் அருண் பாண்டி மரம் வளர்ப்பதின் நன்மைகள் பற்றியும் விளக்கினர். முன்னதாக அப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை நீக்கி சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதில் சீட்ஸ் டிரஸ்ட் பயிற்சி இயக்குநர் அய்யப்பன், தேனீ வளர்ப்பு விவசாயிகள், பசுமைப்படை பள்ளி மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சீட்ஸ் அறக்கட்டளையும் திண்டுக்கல் - பழநி கல்வி மாவட்ட தேசிய பசுமைப் படையும் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி