திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி - கன்னியாபுரம் அருகே அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்டை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை அதிமுக, பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு டோல்கேட் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து வழித்தடங்களையும் திறந்து வைக்க கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அனைத்து வழித்தடங்களும் திறந்து வைக்கப்பட்டு அவ்வழியாக வாகனங்கள் சென்றது.