அப்துல் கலாமின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

80பார்த்தது
அப்துல் கலாமின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள முளையூரில் உழைப்பாளர் மக்கள் நல சங்கம் சார்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி பாரத ரத்னா டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாமின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் அலங்கரிக்கப்பட்ட ஏ. பி. ஜே. அப்துல் கலாம் திருவுருவ படத்துக்கு உழைப்பாளர் மக்கள் நல சங்கம் சார்பில் நிறுவனத் தலைவர் சிவக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அன்னதானத்தை மாநில ஒருங்கிணைப்பாளர் சரவணகுமார், மாநிலச் செயலாளர் ஈஸ்வரி, ஆகியோர் தொடங்கி வைத்தனர். கிராமப்புற ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மதுரை மண்டல செயலாளர் லட்சுமணன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் சோனா, மாவட்டச் செயலாளர் ஆனந்த், மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் சங்கம் உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறுவர் சிறுமியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி