நத்தம்: ஆண்கள் மட்டுமே கலந்துகொண்ட விநோத திருவிழா!

1073பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சேத்தூர் ஊராட்சி, கருத்தலக்கம்பட்டி - புதூரில் உள்ள கருப்பசாமி வடகாட்டான் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் விழா மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இதையொட்டி இம்முறை திருவிழா கடந்த 28-ஆம் தேதி பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் விரதம் தொடங்கினர்.

இதை தொடர்ந்து விரிப்புகள் இன்றி தரையில் தான் படுத்து உறங்க வேண்டும் காய்கறி மற்றும் சாதங்களை தவிர்த்து பாசிப்பருப்பில் தக்காளியை கத்தி மற்றும் அரிவாள்மனையை பயன்படுத்தாமல் கையிலேயே மசிய வைத்து செய்யப்பட்ட உணவை விரத நாட்களில் உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டனர்.

நேற்று காலை கருப்பசாமி வடகாட்டான் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகளை தொடர்ந்து விரதம் விடப்பட்டு கிடாய் வெட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் குழந்தை வரம் மற்றும் தாங்கள் வேண்டிய நேர்ச்சை களுக்காக நேர்த்திக் கடனாக வழங்கப்பட்ட அரிசி மூடைகள், கிடாய்கள் மற்றும் பொருட்களை கொண்டு கறி விருந்து சமையல் நடந்தது.

இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட கிடாய்கள் அரிசி மூட்டைகளை கொண்டு கறிவிருந்து சமையல் நடந்தது. இந்த கோயில் இருக்கும் பகுதிக்கும், கோயிலுக்கும் பெண்கள் வரக்கூடாது. ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத திருவிழாவாகும். இவ்விழாவில் பிரசாதமாக அனைவருக்கும் கறிவிருந்து பரிமாறப்பட்டது.

தொடர்புடைய செய்தி