திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் குட்கா பொருள் கடத்துவதாக வேடசந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் இலக்கியா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வேடசந்தூர் காவல் ஆய்வாளர் வேலாயுதம், சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் தனிப்படை காவலர்கள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது காக்கா தோப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த திண்டுக்கல் சிறுவத்தூர், காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த தண்டாயுதம் மகன் ராஜரத்தினம் என்பவர் இருசக்கர வாகனத்தில் குட்கா கடத்தியது சோதனையில் தெரியவந்தது. அவரை கைது செய்து அவரிடம் இருந்து 10 கிலோ குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.