திண்டுக்கல் அருகே சீலப்பாடியில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல் அருகே சீலப்பாடி பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்பவரின் மனைவி திவ்யா(26) இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாலுகா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்தில் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.