திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் மனோகரன் மற்றும் போலீசார் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது காந்திமார்க்கெட் அருகே கஞ்சா விற்பனை செய்த முத்தழகுப்பட்டி சேர்ந்த அன்பழகன் மனைவி இன்னாசியம்மாள்(44) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.