நிலக்கோட்டை தாலுகா குன்னுவாரன்கோட்டை கிராமத்தை சேர்ந்த மக்கள் சிலர், திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே மாவட்ட ஆட்சியர் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் காவல் ஆய்வாளர் வெங்கடாஜலபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் தங்களுடைய நிலத்தை வருவாய்த்துறையினர் அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஆர். டி. ஓ. அலுவலகத்தில் புகார் அளிக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து கிராம மக்கள் ஆர். டி. ஓ. அலுவலகத்துக்கு சென்று புகார் அளித்து விட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.