வேலையில்லா ஆசிரியர்கள் உண்ணாவிரதம் போராட்டம்

60பார்த்தது
திண்டுக்கல் கல்லறைத் தோட்டம் அருகில் அரசு மற்றும் தனியார் பள்ளி வேலையில்லா ஆசிரியர் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் நாகை செல்லையா தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியருக்கு தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மாத ஊதியத்தை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை TET ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிர போராட்டம் நடைபெற்றது.

இளைஞர் தொழிலாளர் நலன் பணி செயலர்கள் பிலிப் சுதாகர், குழந்தை உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி