தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் 15-வது ஊதிய ஒப்பந்த 3-ம் கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டல தொமுச பேரவை சார்பில் தலைமை அலுவலகம் மற்றும் கிளை அலுவலகம் முன்பு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொதுச் செயலாளர் பொன். செந்தில் தலைமையில் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் 15-வது ஊதிய ஒப்பந்த 3-ம் கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் 14 மற்றும் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை முடிந்துள்ளது.
6% ஊதிய உயர்வு, சலவைப்படி 160 ரூபாயாக உயர்வு, இரவு பணிப்படி 40 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் ஊழியர்கள் குறைந்தபட்சம் 1420 முதல் அதிகபட்சம் 6460 ரூபாய் கூடுதலாக ஊதியம் பெறுவர்.
4 தவணையாக நிலுவைத்தொகை வழங்கப்படும். 2021 மே மாதம் முதல் இன்றுவரை ஓய்வுபெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு ரூ. 2, 894. 23 கோடி பணப்பலன்கள் வழங்கியுள்ளது. பணியில் இறந்த பணியாளர்களின் 1, 016 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை இன்றுவரை வழங்கியுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது
இந்நிகழ்வில் தொழிலாளர், பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.