கல்லூரி ஊழியர் கொலை - இளைஞருக்கு ஆயுள் தண்டனை

1103பார்த்தது
கல்லூரி ஊழியர் கொலை - இளைஞருக்கு ஆயுள் தண்டனை
தனியாா் கல்லூரி ஊழியரை கொலை செய்த வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் நாயக்கா் புதுத் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (40). தனியாா் கல்லூரி ஊழியரான இவா், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கால், கைகள் கட்டப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டாா். இந்த கொலை வழக்கில், மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டி பகுதிச் சோ்ந்த சிவகுமாா் (எ) கோச்சாபாய் (24), தாடிக்கொம்பு சாலை பால திருப்பதியைச் சோ்ந்த 16 வயது சிறுவன் ஆகியோரை திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு தொடா்பான விசாரணை திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் குற்றவாளி சிவக்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட கூடுதல் நீதிபதி ஏ. கே. மெகபூப் அலிகான் புதன்கிழமை தீா்ப்பு அளித்தாா்.

தொடர்புடைய செய்தி