மலையடிவாரத்தில் காட்டுயானைகளை விரட்டும் பணி

60பார்த்தது
மலையடிவாரத்தில் காட்டுயானைகளை விரட்டும் பணி
ஆயக்குடி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் சட்டப்பாறை, வரதாப்பட்டினம், கோம்பைப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக வனத்தில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள் தனியாகவும், கூட்டமாகவும் மேற்கண்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. 

குறிப்பாக 2 நாட்களுக்கு முன்பு பொன்னிமலை கரடு பகுதியில் தோட்டத்தில் புகுந்த காட்டுயானைகள் கொய்யா மரங்கள், ஆழ்துளை கிணறு குழாய்களை சேதப்படுத்தியது. தொடர்ந்து யானைகள் மலையடிவாரத்தில் சுற்றித்திரிவதால் விவசாயிகள் அச்சம் அடைந்தனர். எனவே காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது, 17 வனப்பணியாளர்கள் 3 குழுக்களாக பிரிந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். யானை நடமாட்டம் இருந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளோம் என்றனர்.

தொடர்புடைய செய்தி