ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் திண்டுக்கல் மேற்கு ரத வீதியில் ரூ. 30. 00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி கட்டடத்தை திறந்து வைத்தார்.
திண்டுக்கல் மாநகராட்சி மேற்கு ரத வீதி மாநகராட்சி பள்ளியில் மாநகராட்சி கல்வி நிதியின் கீழ் கூடுதல் வகுப்பறை கட்டடம் ரூ. 30. 00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு, இன்று பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல், நவீன கழிவறை கட்டுதல், சுற்றுச்சுவர் கட்டுதல் ஆகிய 10 பணிகளுக்கு மாநில நிதிக்குழுத் திட்டத்தின் கீழ் ரூ. 3. 49 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 9 மாநகராட்சி பள்ளிகளில் கூடுதல் அபிவிருத்தி செய்யும் பணிகளுக்கு மாநில நிதிக் குழு திட்டத்தின் கீழ் ரூ. 1. 61 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் இராஜப்பா, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், மாநகராட்சி மேற்கு மண்டல குழு தலைவர் பிலால்உசேன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாசருதீன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.