பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் மற்றும் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன என மாவட்ட ஆட்சியர் தகவல்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 18. 10. 2023 அன்று (புதன்கிழமை) காலை 10. 00 மணிக்கும், தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு 19. 10-2023 அன்று (வியாழக்கிழமை) காலை 10. 00 மணிக்கும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடை யேயான பேச்சுப் போட்டிகள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர். அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் நிகழாண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துக்கொள்ளலாம்.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 18. 10. 2023 அன்று நடைபெறவுள்ள பள்ளி மாணவர்களிடையேயான பேச்சுப்போட்டிக்கு 1) காஞ்சித் தலைவன், 2) அண்ணாவும் பெரியாரும், 3) தமிழும் அண்ணாவும். 4)எழுத்தாளராக அண்ணா. 5) தென்னாட்டு பெர்னாட்ஷா ஆகிய தலைப்புகளில் மட்டுமே போட்டி நடத்தப்படும்.
தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு 19: 10. 2023 அன்று நடைபெறவுள்ள பள்ளி மாணவர்களிடையேயான பேச்சுப்போட்டிக்கு 1) வெண்தாடி வேந்தர். 2) வைக்கம் வீரர், 3) பகுத்தறிவு பகலவன், 4) பெரியாரின் சமூகச் சீர்திருத்தங்கள் ஆகிய தலைப்புகளில் மட்டுமே போட்டி நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.