செங்குறிச்சி: மக்கள் தொடர்பு முகாம்

53பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், செங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 200 பயனாளிகளுக்கு ரூ. 77. 30 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முகாமில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டார். அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து துறை அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

இம்முகாமில், உதவி ஆட்சியர்(பயிற்சி) வினோதினி பார்த்திபன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், தனித் துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) கங்காதேவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி