திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட செம்பட்டியில் ஐ.எஸ்.பி. கிளினிக் செயல்பட்டு வருகிறது. இன்று (ஜனவரி 4) காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை சவரி முத்துப்பிள்ளை நினைவு நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
மருத்துவ முகாமில் மருத்துவர்கள் லியோன் வினோத்குமார், கௌதமன், ஸ்ரீதேவி ஆகியோர் கலந்து கொண்டு ரத்த அழுத்தம், சர்க்கரை, இருதய சுருள் வரைபடம், பிசியோதரபி, நீரிழிவு நோயில் கால் பாதங்களில் நரம்புகள் செயல்திறனை கண்டறியும் பரிசோதனை உட்பட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்து மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டதுடன் உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு பரிசோதனை செய்து இலவச ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இலவச மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.