புத்தகம் வாங்குவதற்கு சேமிப்பு உண்டியல் வழங்கும் திட்டம்

61பார்த்தது
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் இலக்கியக் களம் சார்பில் புத்தகத் திருவிழா அக். 10ம் தேதி முதல் அக். 20ம் தேதி வரை திண்டுக்கல் ட்டலி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. புத்தகத் திருவிழாவில் பள்ளி மாணவ மாணவியர்கள், தாங்களே சேமித்து புத்தகங்களை வாங்கிப் பயன்பெற ஏதுவாக இலவச சேமிப்பு உண்டியல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இலக்கியக்கள தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். இலக்கியக்கள செயலாளர் இராம மூர்த்தி வரவேற்றார்.
கோட்டாட்சியர் சக்திவேல் மாணவர்களிடம் உண்டியல்களை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: மாணவர்கள் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொண்டு சேமிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதிகப்படியான தொகையை சேமித்து மொத்த சேமிப்பு தொகைக்கும் புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி, புனித வளனார் மேல்நிலைப்பள்ளி, எம். எஸ். பி. , சோலை நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு உண்டியல்களை பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள் சாமி, பாலசந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இலக்கியக் கள துணைத் தலைவர் சரவணன் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி