செவாலியர் அகாடமியில் சாரண, சாரணியர் தினவிழா

552பார்த்தது
செவாலியர் அகாடமியில் சாரண, சாரணியர் தினவிழா
சாரண சாரணிய இயக்கத்தை துவக்கிய பேடன் பவுலின் பிறந்த நாளை முன்னிட்டுதிண்டுக்கல் செவாலியர் அகாடமி மேல்நிலைப் பள்ளியில்சாரண சாரணியர் தின விழா நடந்தது.

விழாவை பள்ளி தாளாளர் அருட்தந்தை ஆரோக்கிய பிரபு துவக்கி வைத்தார். அருட் தந்தையர்கள் பிரிட்டோ, பிரான்சிஸ் பாபு, தேவன் உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் ரோஸ்லின் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஞானசீலா முன்னிலை வைத்தார். சாரண சாரணியர் பொறுப்பு ஆசிரியர் பிரசாந்த் அனைவரையும் வரவேற்றார்.

இதில் பள்ளி முதல்வர் ரோஸ்லின் பேசியதாவது:

சாரண, சாரணியர் இயக்கம் என்பது எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்பது பொருள். தொண்டு செய்வதே சிறந்த சேவை. அப்படி தொண்டு செய்ய பிறந்தவர்தான் பேடன்பவுல். அவரால் உலகம் முழுவதும் மாணவ மாணவிகளிடம் தொண்டு உள்ளம் ஏற்பட்டுள்ளது. மற்றவர் துயரங்களை மற்றவர் இன்னல்களை யார் ஒருவர் தாங்கிக் கொள்கிறார்களோ. அவர்களே சிறந்த தியாக மனம் கொண்டவர்கள். அவர்களே வரலாற்றில் இடம் பெறுகிறார்கள். நீங்களும் பல சேவைகளை செய்து வரலாற்றில் இடம் பெற வேண்டும். வருங்கால சமுதாயத்துக்கு நீங்கள்தான் தூண். உங்கள் தியாகம் உள்ளம் பிறரை வாழ வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாணவ மாணவிகளுக்கு கவிதை , கட்டுரை, ஓவியம், பாட்டு, வினாடி வினா போட்டிகள் நடந்தன. முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி