தமிழகம் முழுவதும் இன்று தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம் சார்பாக ஒற்றை கோரிக்கையை முன்வைத்து சுமார் 40, 000 தபால்களை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருக்கு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 600 தபால்களை அனுப்பினர்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் சுமார் 40, 000 தபால்களை அனுப்புவதாகவும் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி செயலாளர்கள் தற்காலிக விடுப்பு எடுத்து சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகை முன்பாக பெருந்திரள் முறையீட்டு இயக்கம் நடத்தப்பட உள்ளது என தமிழக ஊராட்சி செயலாளர் சங்கத்தின் தலைவர் ஜான் போஸ்கோ தெரிவித்தார்.