பழனி: மரக்கிளை விழுந்து ஆட்டோக்கள் சேதம்

63பார்த்தது
பழனி-புதுதாராபுரம் சாலையில் வட்டாட்சியர் அலுவலக நுழைவாயிலில் உள்ள மரத்தின் கீழ் ஆட்டோக்கள் நிறுத்துமிடம் அமைந்துள்ளது. அப்பகுதியில் வீசிய பலத்த காற்றால் மரத்தின் கிளைகள் முறிந்து கீழே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களின் மீது விழுந்ததில் இரு ஆட்டோக்கள் சேதமடைந்தன. உடனடியாக நகராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து மரக்கிளைகளை இயந்திரத்தின் உதவியுடன் அகற்றினர்.

தொடர்புடைய செய்தி