திண்டுக்கல்: கார் மோதியதில் தொழிலாளி பலி

1056பார்த்தது
திண்டுக்கல்: கார் மோதியதில் தொழிலாளி பலி
திண்டுக்கல் வக்கம்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாரிமுத்து தனது இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல்லில் இருந்து வடக்கம்பட்டி நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது வந்தலக்குண்டில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த கார், மாரிமுத்துவின் இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி