குற்றவாளிகள் தலைமறைவு

959பார்த்தது
குற்றவாளிகள் தலைமறைவு
திண்டுக்கல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் தலைமறைவு குற்றவாளிகள் கைது-நகர் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.

திண்டுக்கல் அருகே ரயில்வே காலனியில் சரவணன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 5 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இதையடுத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க திண்டுக்கல் எஸ். பி பாஸ்கரன் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து டவுன் டிஎஸ்பி கோகுல கிருஷ்ணன் மேற்பார்வையில், நகர் வடக்கு இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சித்திக், மனோகரன், நகர் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் எட்வர்டு, போலீசார் ராதாகிருஷ்ணன், முகம்மது அலி, விசுவாசம், சக்திவேல் மற்றும் CCTV போலீசார் ஜான் சுரேஷ்குமார், செல்விஆகியோர் இணைந்து பல்வேறு CCTV camera-களை ஆய்வு செய்தனர். இதையடுத்து கொள்ளை வழக்கில் தொடர்புடைய மதுரையைச் சேர்ந்த சாந்தகுமார், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சிவக்குமார் ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி