வட மாநில தொழிலாளி மர்ம மரணம் குறித்து திண்டுக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் மெகுமுண்டா. இவரது மகன் நரேன்முண்டா (வயது 37). இவர் திண்டுக்கல் பழைய கரூர் சாலை குளத்தூர் அருகே உள்ள தனியார் இரும்பு கம்பெனியில் கடந்த 2 மாதமாக அங்கேயே தங்கி பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் அவரது அறையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ரத்த காயத்துடன் மயங்கி கிடந்தார்.
உடனே சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.