புதிய செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பதவி ஏற்பு!

56பார்த்தது
புதிய செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பதவி ஏற்பு!
திண்டுக்கல் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்து வந்த நாகராஜ பூபதியை திடீரென தர்மபுரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்த ஜெகவீராபாண்டியனை திண்டுக்கல் மாவட்டத்திற்கு சில தினங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்தனர்.

இதையடுத்து இன்று(செப்.30) காலை செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் ஜெகவீரபாண்டியன் பதவி ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பூங்கொடியை நேரில் சந்தித்து பி. ஆர். ஓ. வாழ்த்து பெற்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி