நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர்

71பார்த்தது
திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலை பி. வி. தாஸ் காலனியில் அமைந்துள்ளது ஸ்ரீ வீரசக்தி விநாயகர் ஸ்ரீ வீரசக்தி காளியம்மன் திருக்கோயில். இந்த ஆலயத்தின் 49 ஆம் ஆண்டு திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி தங்களது விரதத்தை தொடங்கினர். செவ்வாய்க்கிழமை உலகப் புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் திருக்கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக வலம் வந்து கோயிலை வந்தடைந்த பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக புதன்கிழமை இரவு 10 மணிக்கு மேல் தாடிக்கொம்பு சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ கருப்பணசாமி கோயிலில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டியை கைகளில் ஏந்தி கோயிலை வந்தடைந்தனர். பின்னர் கோயில் முன்பு 21 அடி நீளத்திற்கு அமைக்கப்பட்ட பூக்குழியில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக கைகளில் தீச்சட்டியை ஏந்தியவாறு பூக்குழி இறங்கினர். இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி