திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 25 ஆவது வார்டு பகுதியில் உள்ள அகஸ்தியர் விநாயகர் கோவில் அருகில் பெரிய கழிவு நீர் வாய்க்கால் தூர் வாரும் பணியை இன்று மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் விரைவில் பணியை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். உடன் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.