மதுரைக் கோட்ட கூடுதல் மேலாளா் ஆய்வு

57பார்த்தது
மதுரைக் கோட்ட கூடுதல் மேலாளா் ஆய்வு
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மதுரைக் கோட்ட கூடுதல் மேலாளா் செல்வம் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திண்டுக்கல் ரயில் நிலையத்திலுள்ள 5 நடைமேடைகளிலும் பயணிகளுக்கான குடிநீா் வசதி, மின் விளக்குகள், நடைமேடை தளம் உள்ளிட்ட வசதிகள் குறித்தும், தூய்மைப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுவது குறித்தும் அவா் ஆய்வு மேற்கொண்டாா். நடைமேடைகளில் காத்திருந்த பயணிகளிடமும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறியப்பட்டது.

இந்த ஆய்வின்போது, ரயில் நிலைய மேலாளா் செந்தில்குமாா், கோட்ட வா்த்தக ஆய்வாளா் சத்தியமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி