அலைபேசிகளை துார வீசிவிட்டு புத்தகங்களை வாங்குங்கள். அந்த புத்தகங்கள்தான் உங்கள் மனதோடு பேசும், '' என, சென்னை சமூக பணி கல்லுாரி முதல்வர் மஞ்சுளா பேசினார்.
திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இலக்கிய களம், மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் புத்தக திருவிழாவின் 2ம் நாள் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ஆசிரியர் பணியின் உச்சபட்ச விருது புத்தக திருவிழா மேடை நிகழ்ச்சியில் பங்கேற்பதே. கோயில்களில் பெண்கள் நுழைவது முதல் பல உரிமைகளை பெற்று தந்தது புத்தக தாக்கத்தின் விளைவேயாகும். கொரோனா காலத்தில் அத்தனை தொழிலும் முடங்கிய நிலையில் சமையலையில் மட்டும் உழைப்பு நடந்து கொண்டே இருந்தது. அதை செய்தது குடும்ப பெண்கள்தான். ஆண்கள் சமையல் செய்வது இழுக்கல்ல என்ற நவீன காலத்தை நாம் தொட்டு விட்டோம்.
இத்தனைக்கும் காரணங்கள் வாசிப்பின்
வண்ணங்கள் மட்டும்தான். சமையலுக்கும் படிப்புண்டு என உணர்ந்து கல்வியை அள்ளி தந்தது. தொழிலாளி என்ற சொல்லில் மூன்று லகரங்களும் இணைந்திருக்கும். அதாவது அவர் ஏதாவது ஒரு தொழிலை சார்ந்தவர் என குறிப்பிடுவதாகும்.
இவர்களை கூலியாக கருதாமல் அமைப்பு சாரா தொழிலாளர்கள் என அந்தஸ்தை உயர்த்திய பெருமை புத்தகங்களுக்கு மட்டுமே உண்டு. வாசிப்பின் வண்ணங்களை உணர வேண்டுமானால் அலைபேசிகளை துார வீசி புத்தகங்களை வாங்குங்கள். அந்த புத்தகங்கள் உங்கள் மனதோடு பேசும், என்றார்.