வழக்கறிஞர்கள் தண்டவாளத்தில் ரயிலை மறித்து போராட்டம்

58பார்த்தது
மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள 3 குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த ஒன்றாம் தேதி முதல் வழக்கறிஞர் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், நீதிமன்ற புறக்கணிப்பு என பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதிதாக கொண்டு வந்துள்ள 3 சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது இதனை அடுத்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ADSP மகேஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மறியல் போராட்டத்திற்கு வருகை தந்த நூற்றுக்கு மேற்பட்ட வழக்கறிஞர்களை காவல்துறையினர் நுழைவாயில் தடுத்து நிறுத்தினர் ஆனால் தடையை மீறி ரயில் நிலையத்திற்குள் வழக்கறிஞர்கள் நுழைய முற்பட்டனர் அப்பொழுது காவல்துறையினருக்கும் வக்கீல்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடையை மீறி ரயில் நிலையத்திற்கு சென்ற வழக்கறிஞர்கள் ரயில் இஞ்சின் முன்பு தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மறியல் போராட்டம் சுமார் 30 நிமிடத்திற்கு மேல் நீடித்தது பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் காவல்துறையின் சமூக பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அவர்கள் அப்புறப்படுத்தினார் இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி