தொழிலாளர் நலத்துறை வாரிய தலைவர் ஆய்வு

79பார்த்தது
தொழிலாளர் நலத்துறை வாரிய தலைவர் ஆய்வு
தொழிலாளர்கள் பிரச்சனைகள் அனைத்தும் ஒரு மாதத்தில் தீர்க்கப்படும் என தொழிலாளர் நலத்துறை வாரிய தலைவர் பொன் குமார் கூறினார். திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் நான் ஆய்வு மேற்கொண்டேன். அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு உள்ளனர். தேர்தல் கமிஷன் தேர்தல் முடிந்து ஒரு மாத காலம் எந்தப் பணியும் தமிழ்நாட்டில் செய்யவிடாமல் முடக்கியுள்ளது. தேர்தலுக்காக மூன்று மாத காலம் எந்தப் பணியும் நடக்கவில்லை. அந்தந்த மாவட்டங்களில் தொழிலாளர்கள் பதிவு செய்ய முடியவில்லை.

தேர்தல் நடவு முறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால் முதல் மாவட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வு துவக்கி உள்ளேன். திண்டுக்கல் மாவட்டத்தில் 56, 000 தொழிலாளர்களுக்கு ரூ. 56கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் புதிதாக 50, 779 தொழிலாளர்கள் சேர்ந்துள்ளனர். தமிழக முழுவதும் , 21 லட்சம் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனர். இது தமிழக முதல்வர் ஸ்டாலின் மீது தொழிலாளர் வைத்துள்ள நம்பிக்கை காட்டுகிறது. இது ஒரு வரலாற்றுச் சாதனையாகும். தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 18 நல வாரியங்கள் மூலம் 1555 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி