கொடைக்கானல்: பூங்காவில் முகாமிட்டு வரும் காட்டெருமைகள்

76பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் 60 சதவீதத்திற்கும் மேல் அடர்ந்த வனப்பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் சமீப காலமாகவே காட்டெருமைகள் சுற்றுலாத் தலங்களில் முகாமிட்டு சுற்றுலாப் பயணிகளை தாக்கி வரும் நிலை ஏற்பட்டு வருகிறது. 

தற்போது கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத்தலமான ப்ரையண்ட் பூங்காவில் காட்டெருமை திடீரென்று நுழைந்ததால் சுற்றுலாப் பயணிகளிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் கொடைக்கானலில் முக்கிய பகுதிகளிலும் சுற்றுலாத்தலங்களிலும் முகாமிட்டு வரும் வனவிலங்குகளை குறிப்பாக காட்டெருமைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி