திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு நேற்று ஆந்திராவில் இருந்து 10 கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
அதனை தொடர்ந்து சுற்றுலாவை முடித்துவிட்டு இன்று டெம்போ வாகனத்தில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வத்தலகுண்டு செல்லும் பிரதான மலை சாலையில் பூலத்தூர் பிரிவு என்ற இடத்தில் வலைவான சாலையில் செல்லும் போது டெம்போ வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளது.
இதில் வேன் வாகனத்தில் பயணித்த இரண்டு பேருக்கு கையில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், 5 பேருக்கு பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது, அதிர்ஷ்டவசமாக பலத்த காயங்களுடன் உயிர்த்தப்பினர்.
மேலும் காயம் அடைந்தவர்களை மலை சாலையில் பயணம் செய்த வாகன ஓட்டிகள் மீட்டு வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மலை சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து காரணமாக சிறிது நேரம் இந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.