திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏரிச்சாலை, பூங்கா சாலை, கலையரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன. இந்த நிலையில் பல மாதங்களாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கடை வாடகையை செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனாலும், நகராட்சிக்கு வரி செலுத்தாத 50 கடைகளை நகராட்சி மேலாளர் கணேசன் தலைமையிலான அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.