கொடைக்கானல்: இயல்பு நிலைக்குத் திரும்பிய கொடைக்கானல்

60பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த ஏழு நாட்களுக்கு மேலாக கொடைக்கானல் நகரின் மையப் பகுதி மற்றும் மேல்மலை கீழ் மலை கிராமங்களில் அதிக அளவு பலத்த சூறைக்காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வந்த நிலையில் கொடைக்கானல் வாழும் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.


மேலும் கோடை விடுமுறையை கொண்டாடுவதற்கு கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகளும் கொடைக்கானலில் இயற்கை அழகை கண்டு ரசிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்த நிலை ஏற்பட்டது.


இந்நிலையில் கடந்த ஏழு நாட்களுக்குப் பிறகு இன்று கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இயல்பு வாழ்க்கை திரும்பியதால் கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்தும் ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ச்சி உடன் கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர்.

மேலும் ஜூன் 2 தேதி பள்ளிகள் தொடங்க இருப்பதால் என்று சுற்றுலா பயணிகள் வறுத்து அதிகரித்து காணப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி