கொடைக்கானல்: காட்டுப்பன்றி கறி சமைத்த 3 பேர் கைது

58பார்த்தது
கொடைக்கானல்: காட்டுப்பன்றி கறி சமைத்த 3 பேர் கைது
கொடைக்கானலில் இறந்த காப்பட்டுன்றியை சமைத்து சாப்பிட முயன்ற 3 பேரை வனத்துறை கைது செய்து ரூ. 60 ஆயிரம் அபராதம் விதித்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் இசிசி குடியிருப்பில் நீர்த்தேக்கம் உள்ளது. இதில், தண்ணீர் வெளியேறும் ஓடையில் 3 வயது மதிக்கத்தக்க காட்டுப்பன்றி நேற்று இறந்து கிடந்தது. இதை, அதே பகுதியில் தங்கி கட்டுமானப் பணி செய்து வரும் கரூரைச் சேர்ந்த செந்தில்குமார் (47), விஜயகுமார் (28), நாயுடுபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் (65) ஆகியோர் பார்த்துள்ளனர். அவர்கள் காட்டுப்பன்றியை எடுத்து கிருஷ்ணன் வீட்டுக்கு கொண்டு சென்று, அங்கு துண்டு, துண்டாக வெட்டி சமைத்துள்ளனர். 

இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் கிருஷ்ணன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி குழம்பு கறி மற்றும் 16 கிலோ வேக வைக்காத பன்றி இறைச்சியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் செந்தில்குமார், விஜயகுமார், கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். இவர்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் வீதம் ரூ. 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி