ஐடி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ 2 லட்சம் பணம் கொள்ளை

52பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள வெள்ளபொம்மன்பட்டியை சேர்ந்தவர் வினோதன் (வயது 34). இவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சென்னம நாயக்கன்பட்டி மகாராஜா நகரில் தனது மாமியார் வீட்டில் மனைவியுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குடியேறினார். வெள்ளபொம்மன் பட்டியிலிருந்து மகாராஜா நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்பொழுது அவரது வீட்டில் கதவு மற்றும் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த வினோதன் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்த பொழுது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் பீரோவில் உள்ளே துணிகள் சிதறி கிடந்தது. பின்னர் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 2 லட்சம் ரொக்கம் காணாமல் போனதும் தெரிய வந்தது. இதனை அடுத்து வினோதன் தாடிக்கொம்பு போலீஸசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தாடிக்கொம்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான தாடிக்கொம்பு போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவுகள் ஆராயப்பட்டு வருகின்றது மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் இந்த வீட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொள்ளை முயற்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி