திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே மைதானத்தில் காவல் வாகனங்களை எஸ்பி பாஸ்கரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் காவல் வாகனங்களை பராமரிப்பது குறித்து பல்வேறு அறிவுரைகளை நேற்று வழங்கினார்.
நிகழ்வில் ஆயுதப்படை டி. எஸ். பி. ஆனந்தராஜ், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பாலமுருகன், தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் சரவணன், ஆயுதப்படை ஆய்வாளர் காளீஸ்வரன் என பலர் இருந்தனர்.