6ஆண்டு சிறை தீர்ப்பை கேட்டு தலைமறைவான கணவன், மனைவி கைது

792பார்த்தது
6ஆண்டு சிறை தீர்ப்பை கேட்டு தலைமறைவான கணவன், மனைவி கைது
திண்டுக்கல்: போலி பத்திரம் தயாரித்து அபகரித்த வழக்கில் ஆறாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திண்டுக்கல்லில் தீர்ப்பை கேட்டு தலைமறைவாக இருந்த கணவன் மனைவி சிக்கினர். கொடைக்கானலைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 45. இவருக்கு அதே பகுதியில் நிலம் உள்ளது. நிலத்தை திண்டுக்கலை சேர்ந்த குமாரசாமி 73, பழனியம்மாள் 58, இவரது மகன் பாலமுருகன் 40, ஆகியோர் போலி பத்திரம் மூலம் அபகரித்துள்ளனர். இதுகுறித்து பாஸ்கரன் மாவட்ட குற்றப்பிரிவுரைசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திண்டுக்கல் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோகனா குற்றம் சாட்டப்பட்ட குமாரசாமி பழனியம்மாள் பாஸ்கரன் ஆகியோருக்கு தலா ஆறாண்டுகள் சிறை தண்டனை விதித்தார். தீர்ப்பை கேட்டதும் தலைமறைவாக இருந்த குமாரசாமி மற்றும் பழனியம்மாளை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவரது மகன் பாஸ்கரனை போலீசார் தேடி வருகின்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி