எச். ராஜாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

52பார்த்தது
இந்திய தேசிய காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளரும், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியையும், அவரது அமெரிக்கா பயணத்தையும் பற்றி அவதூறாக பேசிய பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் (பொறுப்பு) எச். ராஜாவை கண்டித்து திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் இன்று. (17. 09. 2024) திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது அலியார், மேற்கு மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி, மாவட்ட துணைத் தலைவர் அப்துல் ரகுமான், மாமன்ற உறுப்பினர் பாரதி, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ரோஜா பேகம், மகிளா, காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவி நாகலட்சுமி, எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் காளிராஜ், வர்த்தக காங்கிரஸ் பிரிவு தலைவர் ஆசிக் அலி, வேங்கை ராஜா, சிவாஜி, மதுரை வீரன், அம்சவல்லி சுசிலா, ஜோதி ராமலிங்கம் உள்ளிட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட காங்கிரசார் கலந்து கொண்டு பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் எச். ராஜாவுக்கு எதிரான கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி