முதலாம் ஆண்டு துவக்க விழா

85பார்த்தது
முதலாம் ஆண்டு துவக்க விழா
திண்டுக்கல்லில் துளிர் அறக்கட்டளை முதலாம் ஆண்டு துவக்க விழா நடந்தது. இதற்கு துளிர் அறக்கட்டளை நிறுவனர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். ஸ்ரீ வாணி ஆர்ட்ஸ் நிறுவனர் முரளிதரன் வரவேற்றார். தேசிய ஹாக்கி விளையாட்டு வீரர் மனிதநேய செம்மல் ஞானகுரு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி நாகராஜ்,
ரோலர் ஸ்கேட்டிங் சங்க மாவட்ட செயலாளர் ராஜகோபால், யூசு சங்க பயிற்சியாளர் ஜாக்கி சங்கர், மதிமுக ஒன்றிய செயலாளர் மோகன், கள்ளப்ப கோனான்பட்டி அதிமுக கிளை செயலாளர் குரு ஜெகநாதன்,

சீலப்பாடி ஊராட்சி உறுப்பினர் ராஜேஷ் , துளிர் அறக்கட்டளை செயலாளர் வி. மாரிமுத்து , பொருளாளர் நீதி மோகன் , ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், திமுக கிளைச் செயலாளர் பொன்னையா உட்பட பலர் பங்கேற்றனர்.
பல்வேறு போட்டியில் வெற்றி பெற்று வாகை சூடிய மாணவ , மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி