திண்டுக்கல் விவேகானந்தா நகர் சிறுவர் பூங்கா அருகில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாமன்ற உறுப்பினர் தனபாலன் தலைமையில் உண்ணாவிரத
போராட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாநகராட்சியின் 14வது வார்டுக்கு உட்பட்டது அண்ணா நகர், விவேகானந்த நகர் கோபால் நகர், வ உ சி நகர் போன்ற பகுதிகளாகும்.
இதில் அண்ணா நகரில் குப்பை கிடங்கு அமைத்ததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வீடுகளில் ஈக்கள் புழுக்கள் தொந்தரவு அதிகமாகியுள்ளது. இதனை மத்திய அமைச்சர் நாராயணசாமி நேரில் ஆய்வு செய்து மாற்ற உத்தரவிட்டும் இதுவரை மாநகராட்சி நிர்வாகம் மாற்றம் செய்யவில்லை. அதனால் நோய் தொற்று அதிகம் ஏற்படும் நிலையில் உள்ளது.
விவேகானந்த நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர். இதில் பிரதான சாலையில் பாதாள சாக்கடை சேதமடைந்து சாலைகளில் கழிவு நீர் வெள்ளப்பெருக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கான பணி செய்வதற்கான உத்தரவு பிறப்பித்தும் பணி நடைபெறாமல் மந்தமான நிலையில் உள்ளது. ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் தினந்தோறும் சென்று வருகின்றனர்.
கோபால் நகர் விஸ்தரிப்பு பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால்கள் இல்லாமல் மழை காலங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் மழைக்காலங்களில் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். இந்த உண்ண விரத போராட்டத்தில்
பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.