திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே “போதை இல்லா தமிழ்நாடு“ என்ற நிலையை உருவாக்கிட போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல் ஜிடிஎன் கல்லுாரியில் விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பு நிகழ்ச்சியை உதவி ஆணையாளர்(கலால்) பால்பாண்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து திண்டுக்கல் ஜெயின்பால்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி, திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் குறும்பட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
போதைப்பொருள் பழக்கம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். போதைப் பழக்கத்தினால் ஒருவர் பாதிக்கப்படுவதனால், அவர் மட்டுமின்றி அவருடைய குடும்பம் மற்றும் சமுதாயமும் பாதிக்கப்படுகிறது. எனவே, போதைப்பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவ, மாணவிகள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைதோறும் “போதை இல்லா தமிழ்நாடு“ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இன்றைய விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளில், ஏராளமான மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு அடைந்தனர்.